Latest News :

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!
Sunday November-10 2024

தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 80. சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று (நவம்பர் 09)  நள்ளிரவு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள டெல்லி கணேஷ் குணச்சித்திர வேடங்களில் மட்டும் இன்றி, நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். 

 

1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த கணேஷ், டெல்லியைச் சேர்ந்த தக்‌ஷிண பாரத நாடக சபா என்ற நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்ததால் ‘டெல்லி’ கணேஷ் என்று அழைக்கப்படார்.

 

1964 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப் படையில் பணியாற்றிய டெல்லி கணேஎஷ், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படம் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்கச்ளில் நடித்திருக்கிறார்.

 

திரைப்படங்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் டெல்லி கணேஷ், தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருது மற்றும் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

 

கடந்த 47 ஆண்டுகளாக திரைத்துறையில் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்த நடிகர் டெல்லி கணேஷின் இறப்பு அவரது ரசிகர்களையும், திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

டெல்லி கணேஷின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related News

10167

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

அனல் அரசு மூலமாக என் மகன் சினிமாவில் அறிமுகமாவதை பாக்கியமாக நினைக்கிறேன் - நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
Sunday June-29 2025

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார்...

Recent Gallery