‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு பாடலில் நடனமாடும் சென்சேஷனல் நடிகை!
Monday November-11 2024

இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘புஷ்பா 2 : தி ரூல்’ திரைப்படத்தின் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் நடிகை யார்? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான விடையை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

புஷ்பா முதல் பாகத்தில் சிறப்பு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அப்பாடல் உலகம் முழுவதும் பிரபலமான பாடலாக தற்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘புஷ்பா 2’-வின் சிறப்பு பாடலில் நடனம் ஆடப்போகும் நடிகை யார்? என்று அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

 

இந்த நிலையில்,  ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் சிறப்பு பாடலில் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் நடன ராணியாக வர்ணிக்கப்படும் ஸ்ரீலீலாவுடன் இணைந்து அல்லு அர்ஜுன் மீண்டும் ஒரு ஹிட் பாடலைக் கொடுக்க தயாராகியிருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

 

Srileela in Pushpa 2

 

விரைவில் படமாக்கப்பட இருக்கும் இந்த சிறப்பு பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைக்க உள்ளார். சமீபத்திய படங்களில் தனது திறமையான நடிப்பு மற்றும் நடனத்தால் கவனம் ஈர்த்து வரும் ஸ்ரீலீலா 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் நடனமாட இருப்பது படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘புஷ்பா 2 : தி ரூல்’ படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

10170

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Actor Sathyaraj Inaugurated the Iswarya Cancer Centre
Monday March-09 2026

Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...

Recent Gallery