Latest News :

தோல்வியால் மனம் மாறிய கவின்! - நிம்மதியடைந்த தயாரிப்பாளர்
Tuesday November-12 2024

‘டாடா’ மற்றும் ‘ஸ்டார்’ என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால் சம்பளம் விசயத்தில் கரார் காட்டி வந்த கவின், ‘பளடி பெக்கர்’ படத்தை மிகவும் நம்பியிருந்தார். அப்படம் எப்படியும் பெரிய வெற்றி பெற்று விடும், அதன் பிறகு தனது சம்பளத்தை மேலும் அதிகரித்து விடலாம் என்று கனவு கண்டவர், அப்படம் வெளியாகும் முன்பே, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன போது பேசிய சம்பளத்தை விட, தற்போது தனது மார்க்கெட் உயர்ந்திருக்கும் அளவுக்கு சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன், என்று பிடிவாதம் பிடித்தார்.

 

ஆனால், படத்தை தயாரிக்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், படம் தொடங்கிய போது பேசிய சம்பளத்தை தவிர கூடுதல் தொகை தர முடியாது, விருப்பம் இருந்தால் நடிக்கட்டும், இல்லையென்றால் படம் அப்படியே கிடக்கட்டும், என்று கூறிவிட்டாராம்.

 

யாருக்கு நஷ்ட்டம் போங்கயா.., என்ற எண்ணத்தில் கவினும் அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு நயன்தாராவுன் இணைந்து நடிக்கும் படம் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் ஒரு படம் என்று இரண்டு படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்தார்.

 

இந்த நிலையில், தீபாவளியன்று வெளியான ‘ப்ளடி பெக்கர்’ படுதோல்வி அடைந்ததால் ஆடிப்போன கவின், சதீஷ் இயக்கும் படத்தை ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட சம்பளத்திலேயே முடித்துக் கொடுக்க முன் வந்திருப்பதோடு, அதற்கான பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.

 

தோல்வி கொடுத்த படிப்பினையால் மனம் மாறிய கவினின் நடவடிக்கையால் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் நிம்மதியடைந்திருக்கிறாராம்.

Related News

10173

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery