வட இந்தியாவில் நடைபெறும் ‘புஷ்பா 2 : தி ரூல்’ பட டிரைலர் வெளியீட்டு விழா!
Tuesday November-12 2024

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்த ’புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் தெலுங்கு சினிமாவை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றது. இதன் அடுத்த பாகம் ‘புஷ்பா2: தி ரூல்’ பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்த டிசம்பர் 5, 2024 அன்று வெளியாக உள்ளது.

 

மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர், சுகுமார் ரைட்டிங்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். படத்திற்கான புரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பாட்னா, கொல்கத்தா, சென்னை, கொச்சி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் புரோமோஷனல் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பாட்னாவில் நவம்பர் 17 ஆம் தேதி பிரமாண்டமான டிரைலர் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

 

இந்த நிகழ்வை அறிவிப்பதற்காக அல்லு அர்ஜுன் துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், பகத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதோடு, படத்தின் சிறப்பு பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆட இருக்கிறார். 

 

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ’புஷ்பா-2: தி ரூல்’ பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Related News

10174

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Actor Sathyaraj Inaugurated the Iswarya Cancer Centre
Monday March-09 2026

Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...

Recent Gallery