தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல், எம்.ஜி.ஆர். – சிவாஜி’, ‘ரஜினி – கமல்’ என்று தொடர்ந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய ’தல – தளபதி’ ரசிர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘விசிறி’.
ஜெ சா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாகிப், ஏ.ஜாபர் சாதிக் ஆகியோர் வழங்க, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக கொண்டு வெளிவந்த ‘வெண்ணிலா வீடு’ திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மகாலிங்கம் தனது மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.
விரைவில் இப்படத்தை வெளியிட உள்ள படக்குழுவினர், உலகத்தமிழர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ படத்தை வரவேற்கும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஒரு படத்தின் ரிலீஸை மற்றொரு படக்குழுவினர் கொண்டாடுவது என்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாகும்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...