யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’. இதில் கதாநாயகியாக தேஜஸ்வினி ஷர்மா நடிக்க, மற்றொரு நாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார்.
வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, ஏசி ஜான் பீட்டர் இசையமைக்கிறார். தீபக் எடிட்டிங் செய்ய, இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி பாடல்கள் எழுதியுள்ளார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையில், “இந்த படம் விமல் சாருக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. இந்த கதைக்கு ஏற்றார் போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவரும் மிக பக்கபலமாக இருந்து உழைத்து வருகின்றனர்.” என்றார்.
விமலின் 35வது திரைப்படம் ’பெல்லடோனா’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்புரி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...