Latest News :

தெறிக்க விட்ட விஜய் - மெர்சலான அஜித் ரசிகர்கள்!
Thursday October-19 2017

தொடர் சாதனைகளை தொடர்ந்து தொடர் சோதனைகளை கடந்து, தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.

 

படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள ஏகோபித்த வரவேற்பால் வசூலி விஜய் தெறிக்க விட, அஜித் ரசிகர்கள் மெர்சலாகி கிடக்கிறார்கள்.

 

சில அஜித் ரசிகர்கல் மெர்சல் படம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இருந்தாலும், படத்தை பார்க்கும் அனைவரும், சூப்பர்...என்று கூறுகின்றனர். அதற்கு ஏற்றவாறு, படம் ரிலீஸான முதல் நாளில், பாகுபலி சாதனையை முறியடித்த அஜித்தின் விவேகம் படத்தின் வசூல் சாதனையை ‘மெர்சல்’ முறியடித்துவிட்டது.

 

விவேகம் படம் ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1. 21 கோடி வசூலித்தது. விஜய்யின் மெர்சல் விவேகத்தை முந்தி ரூ. 1.48 கோடி வசூல் செய்துள்ளது.

 

அமெரிக்காவில் ரிலீஸான அன்று மற்றும் ப்ரீமியர் ஷோக்கள் மூலம் மெர்சல் படம் ரூ. 3.08 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் நல்ல வசூல் செய்துள்ளது மெர்சல்.

 

வார நாளில் ரிலீஸாகியும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் மெர்சல் நல்ல வசூல் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ரூ. 68.01 லட்சமும், இங்கிலாந்தில் ரூ. 81.08 லட்சமும் வசூலித்துள்ளது. மலேசியாவிலும் புதன்கிழமை ரிலீஸான மெர்சல் ரூ. 90.31 லட்சம் வசூல் செய்துள்ளது. 

 

தமிழகத்தில் மட்டும் இன்றி உலக நாடுகள் பலவற்றில் சக்க போடு போடும் ‘மெர்சல்’ படத்தால் விஜய் மற்றும் அட்லி டீம் செம ஹாப்பியில் இருக்கிறார்களாம்.

Related News

1020

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery