சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆசான்’ - பாராட்டில் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு
Wednesday November-27 2024

கோவாவில் நடைபெற்று வரும்  55-ஆவது  இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்  உலகம் முழுவதிலிருந்தும்  திரைப்படங்கள், குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின்  படக்குழுவை அழைத்து  மரியாதை செய்து உயரிய அங்கீகாரத்தை தருகிறது.

 

அந்த வகையில் தமிழகத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய  முழு நீள திரைப்படமான  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, இ.வி. கணேஷ்பாபு இயக்கிய ‘ஆசான்’ குறும்படம் மற்றும் இரண்டு குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.

 

இதுபோல்  உலகின் அனைத்து மொழிகளிலும் இருந்தும்  படங்களை தேர்ந்தெடுத்து இந்த விழாவில் திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் ஒடிசா, ஹிமாச்சல் பிரதேஷ், தமிழ்நாடு ஆகிய   பல்வேறு மாநில நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு  இ.வி.கணேஷ்பாபுவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

amalan in aasan

 

 மேலும் வெளிநாட்டினரும், இந்திய திரைப்படக் கல்லூரி மாணவர்களுமாக  அரங்கம் நிறைந்த காட்சியாக  ‘ஆசான்’ திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் ஜி.வனிதா தயாரிப்பில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ளார். மேலும் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

ஸ்ரீகாந்த் தேவா இசையில், என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவில், சுராஜ்கவி படத்தொகுப்பில்  ஆசான் உருவாகியுள்ளது. இந்திய அரசு நேரடியாக நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

10204

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Actor Sathyaraj Inaugurated the Iswarya Cancer Centre
Monday March-09 2026

Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...

Recent Gallery