‘கங்குவா’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோவை, ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில் தொடங்கியது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.
’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’ மற்றும் ’ஓக்கே ஓக்க ஜீவிதம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இப்படத்தை அதிக பொருச் செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.
காமெடி கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாக உள்ள இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று கோவை, ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

படத்தின் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கும் படக்குழு, பத்தினை 2025 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...