சினிமா துறையில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது குறித்து பல நடிகைகள் தற்போது பேசி வருவதோடு, தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் கூறிவருகிறார்கள்.
இதற்கிடையே, ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து, சம்மந்தப்பட்ட நடிகைகள் வெளியே கூறி வரும் நிலையில், நடிகைகள் அல்லாமல், பல துறைகளைச் சார்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
அதற்காக, ட்விட்டரில் Me too என்ற டேக்கை பயன்படுத்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில், பிரபல நடிகை ராதிகா, தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி “Me too” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பெரிய குடும்ப பின்னணி மற்றும் அரசியல் பின்னணி கொண்ட ராதிகாவே பாலியல் தொல்லையில் சிக்கியிருக்கும் தகவல், கோலிவுட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், ராதிகாவின் இந்த தகவலுக்கு, கமெட் போட்டுள்ள ரசிகர்கள், தங்களது அதிர்ச்சியை தெரிவித்திருப்பதோடு, “உங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு, அவர்களை அசிங்கப்படுத்த வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...