Latest News :

பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்‌ஷாவின் புகைப்படம் வெளியானது!
Saturday December-07 2024

பழம்பெரும் நடிகர் நந்தமுரி தாரக ராம ராவின் பேரனும், நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்யா, தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹனுமான் மூலம் அறியப்பட்ட கிரியேட்டிவ் ஜெம் பிரசாந்த் வர்மா இயக்கும், ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். மோக்ஷக்யாவின் முதல் படம் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) ஒரு பகுதியாக இருக்கும்.

 

மோக்‌ஷக்யா இப்படத்திற்காக நடிப்பு, சண்டை மற்றும் நடனம் ஆகியவற்றில் விரிவான பயிற்சியைப் பெற்று வருகிறார், இந்நிலையில் மோக்‌ஷக்யா, ஸ்டைலான தோற்றத்தில் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் புதிய ஸ்டில்  தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டைலான செக்கர்ஸ் சட்டை அணிந்து, நீண்ட, கச்சிதமாக ஸ்டைல் செய்யப்பட்ட முடி மற்றும் தாடியுடன், அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அவரது நேர்த்தியான தோற்றம் அவர் தெலுங்குத் திரையுலகில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக வலம் வருவார் என்பதைக் காட்டுகிறது.

 

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸின் சுதாகர் செருகூரி, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், M தேஜேஸ்வினி நந்தமுரி இப்படத்தை வழங்குகிறார். மோக்ஷக்யாவின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பழங்கால புராண இதிகாசத்தின் அடிப்படையில் உருவாகும்  இப்படம், தற்போது முன் தயாரிப்பு பணிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

 

இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் மற்ற விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். 

Related News

10212

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery