Latest News :

சசிகுமார் - சிம்ரன் கூட்டணியில் உருவாகும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் முதல் பார்வை வெளியானது
Saturday December-07 2024

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'டூரிஸ்ட் ஃபேமிலி' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

 

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்-மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகள் ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

 

Related News

10213

‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே இரண்டாம் பட வாய்ப்பு பெற்ற கே.ஜெ.சுரேந்தர்!
Thursday January-22 2026

அறிமுக இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மாயபிம்பம்’...

சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் - தமன்னா ஜோடியின் ‘புருஷன்’ படம் தொடங்கியது
Thursday January-22 2026

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது...

கவனம் ஈர்க்கும் ’காந்தி டாக்ஸ்’ பட டீசர்!
Thursday January-22 2026

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது...

Recent Gallery