நடிகை நமீதா விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும், பழைய நடிகர் சரத்பாபுவை அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கான ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கடந்த வாரம் வெளியான இந்த செய்தியை மறுத்த நடிகர் சரத்பாபு, இது வெறும் வதந்தி என்று விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், நடிகை நமீதா தரப்பில் எந்தவித விளக்கமும் இது குறித்து அளிக்கப்படாத நிலையில், தற்போது திருமணம் செய்தி குறித்து நமீதா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில், தனக்கும் நடிகர் சரத்பாபுவுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்ட தகவலைக் கேட்டதுமே ஷாக் ஆகி விட்டதாக கூறியுள்ளார். மேலும், தனக்கும் தன்னை விட மூத்த நடிகருக்கும் திருமணம் செய்து கொள்வது எப்படி சாத்தியம் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த தகவலை வெளியிட்டவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் இது மிகவும் தவறான கருத்து என்று கூறிய நடிகை நமீதா, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...