Latest News :

“உபேந்திரா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான்” - ‘யுஐ’ படக்குழுவை வாழ்த்திய சண்முக பாண்டியன்
Thursday December-19 2024

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான உபேந்திரா இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘யுஐ’. லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி மற்றும் வீனஸ் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி.மனோகரன் மற்றும் கே.பி.ஸ்ரீகாந்த் தயாரித்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘யுஐ’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் நடிகர் சண்முக பாண்டியன் படக்குழுவினரை வாழ்த்தினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சண்முக பாண்டியன் “உபேந்திரா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அப்பாவும் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். 'Ui' படத்தின் டிரெய்லரும் வித்தியாசமாக உள்ளது. ஹாலிவுட் தரத்தில் நம்மால் படம் எடுக்க முடியாதா அவர்கள் செய்வதை நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும். அந்த ஏக்கத்தை இந்தப் படம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை கன்னடப் படம் என்று மட்டும் பார்க்காமல் பான் இந்திய படமாகப் பார்த்து மக்கள் ஆதரவுக் கொடுக்க வேண்டும்” என்றார்.

 

நடிகர் உபேந்திரா பேசுகையில், “டிரெய்லரில் நிறைய வித்தியாசமான விஷயங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தப் படம் ஒரு ஃப்ரூட் சாலட் போல! இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கும். கமர்ஷியல் படத்திற்கு ஏற்ற எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது. இன்னொரு சர்ப்ரைஸான விஷயமும் இதில் நீங்கள் பார்த்து என்னிடம் சொல்ல வேண்டும் என காத்திருக்கிறேன். என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி” எண்றார்.

 

நடிகை ரேஷ்மா பேசுகையில், “முதல் முறையாக சென்னைக்கு என் படத்தின் புரோமோஷனுக்காக வந்திருப்பது மகிழ்ச்சி. என் கதாபாத்திரம் பற்றியும் படம் பற்றியும் பெரிதாக நான் பேச முடியாது. ஆனால், படம் நிச்சயம் உங்களுக்கு பல ஆச்சரியங்களைக் கொடுக்கும்” என்றார்.

 

இணைத் தயாரிப்பாளர் நவீன் பேசுகையில், ”இந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய கனவு. உபேந்திரா சார் இதை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கதையை எந்த ஜானரிலும் அடைக்க முடியாது. தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணி புரிந்துள்ளனர்.” என்றார்.

 

தயாரிப்பாளர் சமீர் பேசுகையில், ”ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும். அதில் உபேந்திராவும் ஒருவர். டிரெய்லர் அருமையாக வந்துள்ளது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்!". என்றார்.

 

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், " தனித்துவமான கதைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர்கள் குறைவு. எந்த விஷயம் எடுத்தாலும் அதை மட்டும் தனித்துவமாக காட்டுவதில் மெனக்கெடுவார். இந்தப் படத்திலும் அந்த வித்தியாசமான கதைக்களம் இருக்கும். அவருக்கும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்". என்றார்.

 

UI

Related News

10230

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery