Latest News :

சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜிவி பிரகாஷ் குமார்!
Saturday December-21 2024

முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார். இதற்காக தன்னை அறிமுகப்படுத்தியவர்கள் முதல் அடுத்த ஆண்டு 100வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பளித்தவர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 

'வெயில்' படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். 

 

ரஜினிகாந்த் - அஜித் - விஜய் - விக்ரம் - சூர்யா - தனுஷ்-  சிலம்பரசன் டி. ஆர்.- பிரபாஸ் - ரவி தேஜா -  சித்தார்த் - கார்த்தி - ஆர்யா-  விஷால்  - ஜெயம் ரவி-  சிவ கார்த்திகேயன் - துல்கர் சல்மான் - ராம் பொத்தனேனி - அதர்வா- ராகவா லாரன்ஸ் - அருண் விஜய் - பரத் - பசுபதி- என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றேன்.  இதற்காக இப்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் வசந்த பாலன், ஏ.எல். விஜய், புஷ்கர்- காயத்ரி,  பி. வாசு, வெற்றி மாறன், செல்வராகவன், தனுஷ் - சுதா கொங்காரா - பாரதிராஜா, அட்லீ, ஹரி, சிம்புதேவன், பாலா, சேரன், சமுத்திரக்கனி, முத்தையா , ஆதிக் ரவிச்சந்திரன், மணிகண்டன், சாம் ஆண்டன், பா. ரஞ்சித், எம். ராஜேஷ், மித்ரன் ஆர் ஜவஹர் , தங்கர் பச்சன், ஏ. கருணாகரன்,  வெங்கி அட்லூரி , அருண் மாதேஸ்வரன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்கள் K. பாலசந்தர், கலைப்புலி எஸ். தாணு, ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம் , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சுரேஷ் பாலாஜி, பிரகாஷ்ராஜ், ஆஸ்கார் வி. ரவிச்சந்திரன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அருண் பாண்டியன், கருணா மூர்த்தி, புஷ்பா கந்தசாமி,  ஆர். ரவீந்திரன்,  ஏ. ஆர். முருகதாஸ், எஸ். ஆர். பிரபு,  டி. சிவா, எஸ். மைக்கேல் ராயப்பன், டி. ஜி. தியாகராஜன்- பி வி எஸ் என் பிரசாத்,  சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நாக வம்சி, மைத்திரி மூவி மேக்கர்ஸ் ரவி - நவீன், அபிஷேக் அகர்வால், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், ஆர். சந்திர பிரகாஷ் ஜெயின், ஆர். சரத்குமார்- திருமதி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களுக்கும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இயக்குநர் & நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் , இசை கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நடிகர் கமல்ஹாசன் சார் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், அவரது தயாரிப்பில் உருவான 'அமரன்'  படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் பாடல்களையும், இசையையும் கேட்டு கமல்ஹாசன் சார் பாராட்டியது எனக்கு மேலும் உற்சாகமூட்டியது.

 

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பல பாடல்களை பாடி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சக இசை கலைஞர்களுக்கும், இந்தப் பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம் 2024 ஆம் ஆண்டில் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைக்கும் நல்ல வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். 'சூரரைப் போற்று' எனும் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதினை வெல்வதற்கு காரணமாக இருந்த இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நூறாவது திரைப்படம் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறேன். 19 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ,முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ,இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள், தற்போது வரை தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும்.. நடிப்பதிலும். பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

அன்புடன் 

 

ஜீ. வி. பிரகாஷ் குமார்.

 

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

10234

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery