ஆரம்பத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி வந்த ‘மெர்சல்’ ரிலிஸின் நெருக்கத்தில் பல சோதனைகளை சந்தித்தது. அனைத்து சோதனைகளையும் கடந்து தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, ஆந்திரா என பக்கத்து மாநிலங்களிலும் வசூலில் சாதனை படைத்து வரும் மெர்சல் குறித்த சில சிறப்பு தகவல்கள் இதோ:
திண்டுக்கல் சிட்டியில் மட்டும் முதல் நாள் ரூ 36 லட்சத்தை வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களில் இது தான் அதிக வசூல் என சினிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட ஆற்காடு, தென் ஆற்காடு என இதுவரை இல்லாத அளவில் ரூ 3 கோடி வசூலித்துள்ளது.
மதுரையில் மட்டும் முதல் நாள் ரூ 3 கோடி வசூலித்துள்ளது.
வெளிநாடுகளில் மெர்சல் நிலவரம்
அமெரிக்காவில் #USA $ 474,131 * 3.08 cr
லண்டனில் #UK £ 94,311 * 81 L
மலேசியாவில் #MYR 586,665 * 90.3 L
ஆஸ்திரேலியாவில் #Aus A$ 133,057 * 68 L
ஃபிரான்ஸில் €87,000 * 66.08 L (4700 பேர்)
லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என சில இடங்களில் ஆல் டைம் ரெக்கார்ட் ஒன் டே சாதனை செய்துள்ளது.
மேலும், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன் லால் நடித்த புலிமுருகன், மம்முட்டி நடித்த தி கிரேட் ஃபாதர் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையையும் ’மெர்சல்’ முறியடித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...