Latest News :

நடிகை அம்பிகாவை தேடும் ‘எல்லாம் நன்மைக்கே’ படக்குழு!
Saturday December-28 2024

80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது.

 

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தனசேகரன் - கோழிக்கடை கோபால் இணைந்து தயாரிக்கும் படம் ‘எல்லாம் நன்மைக்கே’. சமீபத்தில் வெளியான ‘ஒன்வே’ படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகன் வேடத்தில் நடிக்கும் இளம் நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், முக்கியமான வேடத்தில், கதாநாயகியின் அம்மாவாக நடிகை அம்பிகா நடிக்கிறார்.

 

முன்னணி இயக்குநர்கள் பலரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜா பரணிதரபிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். முருகானந்தம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, யானி.ஆர் இசையமைக்கிறார். ஜான் பாபு நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

படம் பற்றி இயக்குநர் ராஜா பரணிதரபிரபு கூறுகையில், “’எல்லாம் நன்மைக்கே’ படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன். தம்பிராமையா, அனுமோகன் , கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன்.” என்றார்.

 

MuthuPandi

 

கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் முதல் கட்டப்படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து பொள்ளாச்சி, வல்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெற்று இறுதியாக சென்னையில் நிறைவடைய உள்ளது.

Related News

10245

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery