Latest News :

நடிகரான இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்!
Friday October-20 2017

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோலி சோடா 2’ படத்தின் மூலம் பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகராகியுள்ளார்.

 

தான் இயக்கும் படங்களில் சிறு சிறு வேடங்களில் தலை காட்டி வந்த இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், முதல் முறையாக தான் இயக்காத ஒரு படத்தில் நடிக்கிறார்.

 

இது குறித்து இயக்குநர் விஜய் மில்டனிடம் கேட்டதற்கு, “இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன். இது  ஒரு கௌரவ கதாபாத்திரமாக இருந்தாலும்  கதையை முன்னோக்கி கொண்டு செல்லும்  கதாபாத்திரமாகும். இக்கதையையும் கதாபாத்திரத்தையும் கவுதம் வாசுதேவ் மேனனிடம்   நான் சொன்ன பொழுது சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது நிஜ வாழ்க்கை இயல்பிற்கும் குணாதிசயத்திற்கும் மிகவும் ஒத்துப்போகும் கதாபாத்திரம் இது என்பதாலேயே அவரை நான் அணுகினேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. நான் நினைத்ததை விட மேலும் சிறப்பாக 'கோலி சோடா 2' உருவாகிவருகிறது.” என்றார்.

 

சமீபத்தில் வெளியான ‘கோலி சோடா 2’ படத்தின் டீசரில் கெளதம் வாசுதேவ் மேனன் வாய்ஸ் ஓவர் தந்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

அடையாளத்திற்கும், அங்கீகாரத்திற்கும் போராடுவதை மையமாக வைத்து பிண்ணப்பட்டுள்ள  இக்கதையில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை  விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனியின்  'Rough Note' நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும்  கிஷோர்  ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சீனி, வினோத் , பரத், சுபிக்ஷா, கிரிஷா, ரக்ஷிதா, ரோகினி, ரேகா, சரவண சுப்பையா, செம்பன்  ஜோஷ் மற்றும் ஸ்டன் ஷிவா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related News

1025

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ திரைப்பட படப்பிடிப்பு
Monday September-15 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

Recent Gallery