ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ.கோபால் இயக்கத்தில் உருவாகும் படம் ‘உசுரே’. இதில், டீஜே அருணாசலம் நாயகனாக நடிக்க, ஜனனி நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எதார்த்தமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில் பின்னணி வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், ‘உசுரே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்களது வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...