Latest News :

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடிக்கும் ’எமன் கட்டளை’!
Tuesday January-07 2025

கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்.எஸ்.ஏ.கார்த்திகேயன், செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் புதிய படத்திற்கு ‘எமன் கட்டளை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வி.சுப்பையன் கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி எஸ்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். 

 

இப்படத்தில் நாயகனாக மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நடித்திருக்கிறார். நாயகியாக சந்திரிகா நடிக்க, அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர் ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஏ.கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு என்.எஸ்.கே இசையமைத்திருக்கிறார். சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.   

 

இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று விடுகிறது. இதனால் மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம் குடித்து விடுகிறார்கள். இதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான அன்பு மனம் வருந்தி அவமானத்தால்  தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான். அங்கு  எமதர்மராஜா கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கனும், அதனால் நீ தான் அந்த  பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறான்.

 

பூலோகம் வந்த அன்பு நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறான். இதற்கிடையில் அவளது தாய்மாமனும் இவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் அன்பு மீது காதல்  கொள்கிறாள். ஆனால் அன்பு விலகி ஓடுகிறான். இவ்வேளையில் 59 நாட்கள் முடிந்து 60 வது நாளும் பிறக்கிறது. எமன் கட்டளைப்படி அப்பெண்ணிற்கு  மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா? என்பதை நகைச்சுவையுடன் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளாக படமாக்கப்பட்டிருக்கின்றது.

 

அனைத்து பணிகளும் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘எமன் கட்டளை’ திரைப்படம் பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

10269

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...

Recent Gallery