பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். ‘ரங்கோலி’ படத்தை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நிஹாரிகா நாயகியாக நடிக்க, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை, சத்யம் பி.வி.ஆர் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.ஜெகதீஷ் பேசுகையில், “ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது பத்திரிக்கையாளர்கள் தான், உங்களுக்கு நன்றி. டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக விடாமுயற்சி டீமுக்கும் அஜித் சாருக்கும் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது. இந்தப்படத்தை ஆரம்பித்த போது பொங்கல் மாதிரி பண்டிகையில் வெளியிட வேண்டும் என நினைத்தோம், அது நடந்துள்ளது. இது பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற படம். காதல், ஆக்சன் என எல்லாம் அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. இந்தப்படத்தோடு பத்து படங்கள் பொங்கலுக்கு வருகிறது. வரட்டும் கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களுக்குப் பிடிக்கும். என்னுடன் என் டீம் துணை நிற்பார்கள். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
எடிட்டர் வசந்த் பேசுகையில், “மெட்ராஸ்காரன் என் முதல் படம், இந்த வாய்பைத் தந்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசுகையில், “இறுதியாக ஜனவரி 10 ஆம் தேதி மெட்ராஸ்காரன் திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். அவர் மிகச்சிறந்த தயாரிப்பாளர், மிகச் சிறந்த மனிதர். திரைத்துறைக்குத் தேவையான தயாரிப்பாளர். இந்த திரைப்படத்திற்கு, எத்தனை தடைகள் வந்தாலும், விட்டுவிடாமல் தயாரித்துள்ளார். எனக்கு இந்த திரைப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் மிக நல்ல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா, வாழ்த்துக்கள். நிஹாரிகாவுக்கும் வாழ்த்துக்கள். கலையரசன் மிகச் சிறந்த கோ ஸ்டார், அவருக்கும் வாழ்த்துக்கள். ஜனவரி இந்த பொங்கலுக்கு மெட்ராஸ்காரன் படத்தைப் பார்த்து எல்லோரும் ஆதரவு தாருங்கள். இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகை நிஹாரிகா பேசுகையில், “எங்களது திரைப்படம் இறுதியாக இந்தப் பொங்கலுக்கு வெளியாகிறது. நான் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும், முதலில் தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் பல தடைகளைத் தாண்டி, இந்த திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு படத்தைத் தயாரிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது, எனக்கு தெரியும். இந்த நிலைக்கு இந்த படத்தைக் கொண்டு வந்ததே வெற்றியின் முதல் படி தான். ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறீர்கள். இதில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் தங்களது முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். எடிட்டர் வசந்த் மிக அட்டகாசமாகப் படத்தைத் தொகுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சி எஸ், உங்களின் மிகத் தீவிர ரசிகை நான், மிக அற்புதமான இசையைத் தந்து இருக்கிறீர்கள். காதல் சடுகுடு பாட்டைத் தந்த சரிகமா நிறுவனத்திற்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் வாலி மோகன்தாஸ், இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. மெட்ராஸ்காரன் திரைப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும், உங்களை மகிழ்விக்கும். இப்படத்தில் கலையரசன் , ஷேன் நிகம் இருவருக்கும் கொடுக்கும் அன்பை, எனக்கும் தாருங்கள். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் கலையரசன் பேசுகையில், “மெட்ராஸ் என் சொந்த ஊர், எப்போதுமே எனக்கு மெட்ராஸ் பிடிக்கும். மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் ஒரு பங்காக நானும் இருப்பது மகிழ்ச்சி. நடிகர் ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். மிகச்சிறந்த படத்தைத் தந்துள்ளீர்கள். ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டம். இன்றைய நிலைமையில், தியேட்டர் ஓடிடி என பிசினஸ் பார்ப்பது, திரையரங்குக்குத் திரைப்படத்தைக் கொண்டு வருவது, மிகப் பெரிய படங்களுக்கே சிக்கலாக உள்ளது, அந்த வகையில் இந்த படத்திற்கு டிரெய்லருக்கு ஒரு விழா, டீசருக்கு ஒரு விழா, என மிக சிறப்பாக விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு நன்றிகள். என்னிடம் சிலர் என்ன தயாரிப்பாளர் நிறையப் பணம் வைத்திருக்கிறாரா? என்று கேட்டனர். இல்லை நல்ல மனது வைத்திருக்கிறார் என்று சொன்னேன். என்னுடன் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவைத் தந்துள்ளார். என்னுடைய அடுத்த படத்திற்கும் சாம் சி எஸ் தான் இசையமைப்பாளர். சாம் சி எஸ் இசை எப்போதும் நம்முடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், அவருக்கு என் நன்றி. இந்த படத்தில் என் கதாபாத்திரமே மிக வித்தியாசமாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களை மகிழ்விக்கும் படைப்பாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நிறையத் திரைப்படங்கள் வருகிறது, ஒரு பெரிய படம் வரவில்லை என்றவுடன் இத்தனை திரைப்படங்கள் வருவது, நல்ல விஷயம் தான், ஆனால் இது நார்மலாகவே நடந்தால் நன்றாக இருக்கும். ஒரு பண்டிகையின் போது, முன்பெல்லாம் பல திரைப்படங்கள் வெளியாகும் நிலை இருந்தது, அந்த நிலை மீண்டும் வரவேண்டும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசுகையில், “இப்படத்திற்காக நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்றதிற்காக பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜெகதீஷ், இப்படத்தை டீசரில் ஆரம்பித்து, சிங்கிள், டிரெய்லர் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விழா எடுத்து, இப்படத்தை மிகச் சிறப்பாக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அவருக்கு என் நன்றிகள். அடுத்ததாக ஐஸ்வர்யா தத்தா, அவர் எனது நெருங்கிய நண்பர், இந்த படம் அவரால் தான் துவங்கியது, அவருக்கு என் நன்றிகள். ஷேன் நிகம் என்னை நம்பி இந்த படத்திற்குள் வந்ததற்கு நன்றி. நிஹாரிகா உங்களுக்கு ஒரு முறை தான், கதை சொன்னேன், என்னை நம்பி வந்ததற்கு நன்றி. கலையரசன் அண்ணன் உடன் நிறைய உரையாடினேன், மிகச் சிறந்த மனிதர் அவருக்கு என் நன்றிகள். நடிகர் கருணாஸ் என் வாழ்க்கையிலும் அவர் மிக முக்கியமான நபர், இந்தப் படத்தில் மிக சீரியஸ் ரோல் அதை மிக அழகாகச் செய்து தந்தார். இந்தப் படத்திற்காக என்னுடன் உழைத்த அனைத்து படக்குழுவினருக்கும் நன்றிகள். கண்டிப்பாக இந்த படம் உங்களை மகிழ்விக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் ஷேன் நிகம் பேசுகையில், “நான் ரொம்ப லக்கி, மலையாளத்தில் கூட எனக்கு இப்படிச் சிறப்பான அறிமுகம் கிடைக்கவில்லை. தமிழில் ஒரு மிகச் சிறப்பான திரைப்படம் கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு யோசித்த இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு நன்றி. என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. நடிகர் கலையரசன் மிக இயல்பானவர். பார்த்தவுடன் மச்சான் என அழைத்து, மிக இயல்பாகப் பழகுவார். அவ்வளவு எளிமையானவர். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவு தந்துள்ளார். இவரை விட வெகு வேகமாக வேலை செய்யும் ஒளிப்பதிவாளரை நான் சந்தித்ததே இல்லை. எடிட்டர் வசந்த் மிக அற்புதமாகப் படத்தை எடிட் செய்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி எஸ் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் அனைத்து கலைஞர்களும் மிகச் சிறப்பான உழைப்பைத் தந்து இருக்கிறார்கள். நிஹாரிகா மிகச்சிறந்த கோ ஸ்டார் அவருக்கு நன்றி. ஐஸ்வர்யா தத்தா மிகவும் அப்பாவி, இவ்வளவு இன்னொசன்ஸாக ஒருத்தரை நான் பார்த்ததில்லை, மனதில் பட்டதைப் பேசுவார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கும் இயக்குநர் வாலி மோகன் தாஸ், ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக உருவெடுக்க அதன் மூலம், இருவரது வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது என்பதை பரபரப்பான ஆக்ஷன் கமர்ஷியல் டிராமாவாக இயக்கியிருக்கிறார்.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...