Latest News :

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”.  இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது.  மேத்னஸ் குரூப் (Mathens Group) இப்படத்தினை இணைந்து வழங்குகிறது. 

 

பொங்கல் வாழ்த்துக்களுடன், பிப்ரவரி திரை வெளியீடு குறித்த, அறிவிப்பு போஸ்டரை, தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து வீட்டுப் பிண்ணணியில், அன்பான  விலங்குகளுடன், கர்பிணி மனைவியை அணைத்தபடி, அப்புகுட்டி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர், ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

 

கிராமத்துப் பின்னணியில் அழுத்தமான சமூகம் கருத்துடன், வித்தியாசமான ஃபேண்டஸி டிராமாவாக இப்படத்தை இயக்கியுள்ளார் ராஜு சந்ரா. மலையாளத்தில் இரண்டு படங்கள் இயக்கிய ராஜுசந்ராவின் முதல் தமிழ்ப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. 

 

தேசியவிருது நாயகன் அப்புக்குட்டி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்,  டாக்டர் உட்பட பல வெற்றிப்படங்களில், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த நடிகை ஸ்ரீஜாரவி, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா அனில்குமார், ரோஜி மாத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன்,  ஈஸ்வரி, நீலா கருணாகரன், ,சுல்பியா மஜீத், இன்பரசு, ராகேந்து, விஷ்ணு, வேல்முருகன், ருக்மணி பாபு, வினு அச்சுதன், பக்தவல்சலன், அமித் மாதவன், விபின் தேவ்,  வினீத் ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்..

 

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி , ஆலியார் டேம், கேரளவிலுள்ள வாகமன் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. விரைவில் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

Related News

10287

”என் படங்களுக்கு திரையரங்குகளை கொடுங்கள்” - நடிகர் மகேந்திரன் கோரிக்கை
Thursday December-25 2025

எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம்  ‘த்ரிகண்டா’...

பிரபலங்களின் சுவாரஸ்ய தகவல்களோடு உருவாகியுள்ள ஆர்.எம்.வீரப்பன் பற்றிய ஆவணப்படம்!
Wednesday December-24 2025

தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

Recent Gallery