தீபாவளிக்கு வெளியான விஜயின் ‘மெர்சல்’ தமிழகம் மட்டும் இன்றி தென் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. திரையிட்ட அனைத்து பகுதிகளிலும் வசூலில் சாதனை படைத்து வரும் இப்படத்தில் டிஜிட்டல் மணி, ஜி.எஸ்.டி உள்ளிட்டவை குறித்து உள்ள வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”7 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் கிடைக்கும் போது, 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவின் இலவச மருத்துவம் இல்லை ஏன்?” உள்ளிட்ட பல வசனங்களு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.
இந்த நிலையில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் 2 நாட்களில் அந்த காட்சிகளை நீக்க பாஜக கெடு விதித்தது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்க, ‘மெர்சல்’ தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பல பிரச்சினைகளை கடந்து படம் வெளியாகியுள்ளதால், இதுபோன்ற எதிர்ப்புகளால் எங்கே இன்னும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் மெர்சல் தயாரிப்பாளர் முரளி காட்சிகளை நீக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...