இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ்- டீசர் - ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீயான் விக்ரம் - இயக்குநர் அருண்குமார் - தயாரிப்பாளர் ரியா ஷிபு கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாலும், முதலில் 'வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...
இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன...