தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய், ‘மெர்ச’ படத்தின் வெற்றியாலும், படத்தில் பேசப்பட்ட வசனங்களாலும், மக்களால் கவனிக்கப்படும் நடிகராகியுள்ளார். அவரது மெர்சல் படம் ரிலிஸிற்கு முன்பாக பல பிரச்சினைகளை சந்தித்த நிலையில், ரிலிஸிற்கு பிறகு பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், விஜய் தனது தான் சொன்ன ஒன்றை கடைபிடிக்காமல் போனதால், ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதாவது, ‘துப்பாக்கி’ படத்தின் போது விஜய் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. பிறகு அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டதோடு, ”இனி என் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சி வராது” என்று விஜய் கூறினார்.
ஆனால், ‘மெர்சல்’ படத்தில் மேஜிக் நிபுணராக வரும் விஜய், பல காட்சிகளில் சிகரெட் புகைத்தபடி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஜய்க்கு ஏராளமான சிறுவர்கள் ரசிகர்களாக இருப்பதால், புகை பிடிக்கும் காட்சியில் விஜய் நடித்திருப்பதை யாரும் விரும்பவில்லை.
அதேபோல், புகை பிடிக்க மாட்டேன், என்று சொல்லிவிட்டு, நீங்களே இப்படி செய்யலாமா? என்று பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜயிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...