Latest News :

விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது !
Thursday February-13 2025

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘லவ் மேரேஜ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்லது. இப்படத்தில் சுஷ்மிதா பட் நாயகியாக நடிக்க, மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம், கோடங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.

 

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ( Rise East Entertainment) மற்றும் அஸ்யூர் பிலிம்ஸ் ( Assure Films) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்ய, பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை எம்.முரளி கவனிக்கிறார். 

 

கிராம பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் கதையின் நாயகன்- நாயகி மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

படம் குறித்து இயக்குநர் சண்முக பிரியன் கூறுகையில், “கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக 'லவ் மேரேஜ்' தயாராகிறது.  தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

 

Love Marriage First Look

 

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், ‘லவ் மேரேஜ்’ படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

10319

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery