‘சதுரங்க வேட்டை 2’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ என பிஸியாக நடித்து வரும் அரவிந்த்சாமி, அடுத்ததாக் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்கர் ஒரு ராஸ்கர், சதுரங்க வேட்டை 2 படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, வணங்காமுடி படமும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாம். இதையடுத்து, நரகாசூரன் படம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மணிரத்னம் படத்திற்காக தேதிகளை ஒதுக்கியுள்ள அரவிந்த்சாமி, அப்படியே கே.எஸ்.ரவிக்குமாருக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
பாலகிருஷ்ணாவை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் தெலுங்கு படம் முடிந்த பிறகு, அரவிந்த்சாமியின் படம் தொடங்க உள்ளதாம். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறதாம்.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...