அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட்ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ' ஆஸம் கிஸா..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் கெலி தீ மற்றும் கானா ஃபிரான்ஸிஸ் ஆகியோர் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆஃப்ரோ ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டீசர் , ட்ரெய்லர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா - ஸ்வினீத் எஸ். சுகுமார்- ஆஃப்ரோ கூட்டணி திரையிசை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் வைப்( Vibe)பான பாடலாக ..' ஆஸம் கிஸா..' உருவாகி இருப்பதால் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...