தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஒற்றுமையாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் மோதிக்கொள்வது வழக்கம். அஜித் படம் குறித்து விஜய் ரசிகர்கள் கேலியாக மீம்ஸ் வெளியிடுவதும், விஜய் படம் குறித்து அஜித் ரசிகர்கள் கேலியாக மீம்ஸ்கள் வெளியிடுவதும் வாடிக்கையான ஒன்று தான்.
ஆனால், தற்போது ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக எழுந்துள்ள பிரச்சினையில், விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள அஜித் ரசிகர்கள், படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் மக்கள் கருத்தாக உள்ளது, அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அஜித் ரசிகர்களின் இத்தகைய பதிவுகளுக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...