Latest News :

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் விமலின் ‘ஓம் காளி ஜெய் காளி’!
Sunday March-02 2025

விமல் நாயகனாக நடிக்கும் ‘ஓம் காளி ஜெய் காளி’ திரைப்படம் ஆக்‌ஷன், பழிவாங்குதல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டும் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

 

விமலுடன், சீமா பிஸ்வாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, ஜி.எம்.குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின், க்வின்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணமாகும். 

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்தி வாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது. கதை மீதான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது.  கொண்டாட்டங்களின் பிரமாண்டமும், காளி நடனமும் கதைக்களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

 

கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராமு செல்லப்பா மற்றும் குமரவேல் திரைக்கதை எழுதியுள்ளனர். ராமு செல்லப்பா வசனம் எழுதியிருக்கிறார். மணி அமுதவன் பாடல்கள் எழுதியிருக்கிறார். 

Related News

10353

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery