‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி மூன்றாவது முறையாக ‘திரெளபதி 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி தயாரிக்கும் இப்படத்தின் கதைக்களம் 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியை கொண்டதாகும்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், படம் குறித்து இயக்குநர் மோகன்.ஜி கூறுகையில், “படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மும்பை, ஹைதராபாத், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இதற்கு முன்பு எங்கும் பார்த்திராத இடங்களில் மொத்த படப்பிடிப்பும் நடக்க இருக்கிறது. இந்த வருட முடிவுக்குள் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. 'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் ஹொய்சாள வம்சத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. தர்மத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அந்த வீரம் மிக்க வீரர்களின் கதையை இந்தப் படம் சொல்லும்.’ என்றார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார்.
படத்தில் நடிக்க கூடிய மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படம் குறித்தான மற்ற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...