தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே நிவின்பாலியின் ‘ஹேஜுட்’ படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் எண்ட்ரியான திரிஷா, தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது திரிஷாவின் இரண்டாவது மலையாளப் படமாகும்.
‘வில்லன்’ படத்தை தொடர்ந்து, மோகன்லால் தற்போது பிரமாண்டமாக தயாராகி வரும் ‘ஒடியன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தாக அவர் நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அஜய் வர்மா என்ற புதிய இயக்குநர் இயக்குகிறார்.
இந்த படத்தில் நாயகியாக திரிஷா ஒப்பந்தமாகியிருக்கிறார். மற்றொரு நாயகியாக மீனாவும் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. மீனா மோகன்லாலுடன் பல படங்களில் நடித்திருந்தாலும், திரிஷாவுக்கு இது தான் மோகன்லாலுடன் முதல் படமாகும்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...