Latest News :

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் மற்றும் ஐவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெளடி பிக்சரஸ் ஆகிய நிறுவனங்களின் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

 

இன்று நடைபெற்ற பூஜைக்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான கோவில் அரங்கம் வடிவமைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் நடிகர் ஜெயம் ரவி, நடிகை மீனா உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள். 

 

முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக உருவாக உள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ஐவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

 

தனது தனித்துவமான காமெடி எண்டர்டெயினர் படங்கள் மூலம், திரையுலகைச் செழிக்க வைப்பதுடன், ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வரும் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தை இயக்குகிறார். இப்படம் அழுத்தமான கதையுடன், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. இயக்குநர் சுந்தர் சி, நயன்தாரா இருவரும் முதல்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர். 

 

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, வெங்கட் ராகவன் வசனம் எழுதுகிறார். பொன்ராஜ் கலை இயக்குநராக பணியாற்ற, ராஜசேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

Related News

10363

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery