‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி.ஜே.பானு இணைந்து நடிக்கும் புதிய படம் ‘அந்தோனி’.
ஓசை பிலிம்ஸ் சார்பில் கலை வளரி சக இரமணா, சுகா, விஜய் பாலசிங்கம் பிலிம்ஸ் சார்பில் விஜய் சங்கர், ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிரீஸ் கந்தராஜ் மற்றும் கனா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்குகிறார்கள்.
கயல் வின்செண்ட், டிஜே பானு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அருள்தாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
‘மணல்’ திரைப்படம் மூலம் சர்வதேச விருது வென்ற ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, ‘சித்தா’ புகழ் சுரேஷ் ஏ.பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். கலா மோகன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
ஈழத்தின் கடற்கரை வாழ்வியல் கதையாக உருவாகும் இப்படம் சமீபத்தில் இலங்கையில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...