தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படத்தினை கடந்த மூன்று நாட்களாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் இன்று புதிய கொண்டாட்டத்தை அரங்கேற்றியதோடு, அதை டிவிட்டரி டிரெண்டாகவும் மாற்றியுள்ளனர்.
எங்கு பார்த்தாலும் மெர்சல், எதிலும் மெர்சல் என்று இருந்த நிலையில், அஜித் ரசிகர்கள் இன்று களத்தில் இறங்கி அஜித்தை டிரெண்டாக்கியுள்ளார்கள். அதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வரலாறு’ படத்தின் 11 ம் ஆண்டை அவர்கள் இன்று கொண்டாடியுள்ளனர்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வரலாறு படத்தின் 11 ஆண்டு விழாவை அஜித் ரசிகர்கள் இன்று வைரலாக்கிவிட்டனர். காலை முதல் வரலாறு பற்றிய பதிவுகள் ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தில் அஜித்தின் நடிப்பு மற்றும் பெண் தன்மை கொண்ட அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...