Latest News :

பாடலாசிரியர் விவேகா தலைமையில் ஒன்றிணையும் சோசியல் மீடியா கலைஞர்கள்!
Wednesday March-19 2025

இன்புஃளன்சர்ஸ் (Influencers) என்று சொல்லக் கூடிய சமூக வலைதளப்பக்க கலைஞர்களை ஒன்றிணைத்து South Indian Social Media Influencers Association (SISMIA) என்ற சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரபல திரைப்பட பாடலாசிரியர் விவேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக திரைப்பட தயாரிப்பாளர் எல்.என்.எச் கிரியேஷன்ஸ் கே.லக்‌ஷ்மி நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

இந்த புதிய சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் விவேகா, செயலாளர் கே.லக்‌ஷ்மி நாராயணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தனர்.

 

சங்கத்தின் தலைவரான பாடலாசிரியர் விவேகா பேசுகையில்,  “இந்த இனிய மாலைப்பொழுதில் இங்கே குழுமியிருக்கும் ஊடக உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

South indian social media influencers association (SISMIA) தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கமானது கடந்த 14-ஆம் தேதி க்ரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்ட தொடக்க விழாவாக நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். மாபெரும் வெற்றி விழாவாக அது அமைந்தது.

 

சோசியல் மீடியா Influencers என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏன் என்றால் ஒரு உளியை எடுத்து தன்னை சிற்பமாக செதுக்குவது போல தன் கைவசம்  இருக்கும் திறமையை மூலதனமாக கொண்டு தங்களுக்குள்ளே வெளிச்சம் பாய்ச்சு கொண்டு வெளியே வருகிறார்கள். அவர்களை தாய்மையோடு அரவணைத்து செல்ல தான் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

 

சோசியல் மீடியாவில் இன்று சாதாரணமானவரை உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். அது ஒரு கூர்மையான கத்தி நேர்மையாக கொண்டு செல்லம்போது பல்வேறு வெற்றிகளை நாம் சாதிக்க முடியும். 

சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் விதமாக தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிய ஆச்சர்யங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு மாபெரும் போராட்டமாக மாறியது இந்த சோசியல் மீடியாவால் தான். நல்ல நோக்கோடு இதை கொண்டு செல்லும் விதமாக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

 

தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் நோக்கங்கள் (SISMIA):

 

1. இதுவரை அமைப்பு சாரா கலைஞர்களாக இருக்கும் Social Media Influencers-களை SISMIA எனும் உறுதியான அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருதல்.

 

2.சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கான பாதுக்காப்பை உறுதி செய்தல்.

 

3.Social Media Influencers-கான புதிய பணிவாய்ப்புகளை ஏற்படுத்துதல்; அவர்களுக்கான பயிற்சி முகாம்களை

அமைத்தல்.

 

4. மத்திய மாநில அரசுகளோடு பேசி Social Media Influencers-க்கான நலத்திட்டங்களை பெற்றுத்தருதல்

 

5. ஏற்கனவே காப்பீட்டு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கு சங்கமே மருத்துவக் காப்பீட்டுக்கான தொகையைச் செலுத்தியுள்ளது

 

6. ஏபரல் 1 ஆம் தேதி முதல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் பயன் பெறுவர். இன்னும் சில காப்பீட்டுத் திட்டங்களையும் சங்கம் ஏற்பாடு செய்ய முயற்சிக்கும்.

 

7. தனிநபராக இருப்போர் குழுவாக இணைந்து பயன் பெற சங்கம் உறுதுணையாக நிற்கும்

 

8.சங்கத்தின் சட்டப் பாதுக்காப்புக் குழு உறுப்பினர்களின் நேர்மையான தேவைகளுக்குத் துணை நிற்கும் சங்கத்தின் தொழில் நுட்பக் குழு உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்.

Related News

10374

சீமான் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மயுத்தம்’!
Saturday April-26 2025

’முந்திரிக்காடு’ படத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் நடிகராக ஒரு திரைப்படத்தில் களம் இறங்கியுள்ளார்...

’சச்சின்’ படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள் - தயாரிப்பாளர் தாணு நெகிழ்ச்சி
Saturday April-26 2025

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது...

ரசிகர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ படத்தில் உள்ளது! - நானி உறுதி
Saturday April-26 2025

நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது...

Recent Gallery