Latest News :

பத்த வச்ச வெங்கட் பிரபு - மோதிக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்!
Saturday October-21 2017

தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கமர்ஷியல் மசாலா படமாக இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கருவாலும், வசனங்களாலும், விமர்சனம் ரீதியாகவும் பல பாராட்டுக்களை பெற்று வரும் படம் பல எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.

 

அதே சமயம், ‘மெர்சல்’ படத்திற்கு ஆதராவக பல திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வருவதோடு, படத்தை பாராட்டவும் செய்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மெர்சல் படம் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட கருத்தால், விஜய் - அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்.

 

‘மெர்சல்’ குறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கட் பிரபு, ”மெர்சல் ஒரு விழாக்கால விருந்து. மிக அற்புதமாக அட்லியால் கையாளப்பட்டுள்ளது. பஞ்சு சாருக்கே எல்லாப் பெருமையும் சேர வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

 

இதற்கு பதிலளிக்கும் வகையில் மறைந்த பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு, "அவருக்கான (பஞ்சு அருணாச்சலத்துக்கான) பெருமையை யாரிடமும் வேண்டிப் பெறத் தேவையில்லை. மயங்குகிறாள் ஒரு மாது தான் திருட்டுப்பயலே என ரீமேக் ஆனது. ஆனால், அதில் எந்த கிரெடிட்டும் அவருக்கு அளிக்கப்படவில்லை. விட்டுத்தள்ளுங்கள். சாதனையாளர்கள் என்றும் சாதனையாளர்களே " என்று தெரிவித்திருக்கிறார்.

 

வெங்கட் பிரபுவின் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விஜய் ரசிகர்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, "தங்களுடைய படங்கள் எல்லாம் ஹாலிவுட் படத்தின் தழுவல் தானே" என்றும் சமூக வலைதளங்களில் பதிவுட்டு வருகிறார்கள்.

 

அஜித்தை வைத்து வெங்கட் பிரபு ‘மங்காத்தா’ படத்தை இயக்கியதால், அஜித் ரசிகர்கள் வெங்கட் பிரபுவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்களுடன் மல்லுக்கட்ட தொடங்கியுள்ளார்கள். மெர்சல் படத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்த போது, விஜய்க்கு ஆதரவு தெரிவித்த அஜித் ரசிகர்கள் தற்போது, விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 

 

விஜய் - அஜித் ரசிகர்களின் இந்த அனல் பறக்கும் மோதலுக்கு, வெங்கட் பிரபு பத்த வச்ச தீயே காரணம்.

Related News

1038

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery