Latest News :

வரலட்சுமி சரத்குமாரின் ‘தி வெர்டிக்ட்’ முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
Saturday March-22 2025

அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் ‘தி வெர்டிக்ட்’. இதில், வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கும் கொலையும், கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ள இப்படம் பற்றி தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன் தாஸ் கூறுகையில், “மர்மங்களும் எதிர்பாராத முடிச்சுகளும் யூகிக்க முடியாத திருப்பங்களும் நிறைந்த திரில்லர் படமாக இந்த 'தி வெர்டிக்ட்' திரைப்படம் உருவாகி இருக்கிறது. இது நிச்சயமாக சிலிர்க்கும் உணர்வோடு பார்வையாளர்களை  இருக்கை நுனியில் அமர வைக்கும்.” என்றார்.

 

படத்தை எழுதி இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர்  படத்தைப் பற்றி கூறுகையில், “ஒரு பணக்கார அமெரிக்க பெண் கொலை ஆகிறாள். அவளுடன் நட்பு பாராட்டி வந்த இன்னொரு பெண் அந்தக் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறாள்.அவளது கணவர் சிக்கலில் மாட்டியுள்ள தன் மனைவியை மீட்கப் போராடுகிறார்.ஒரு பாவமும் அறியாத தன் மனைவி ஒரு நிரபராதி, என்று நம்பிக்கையுடன் காப்பாற்ற போராடும் கணவன். இது ஒரு பக்கம் என்றால், குற்ற செயல் நடந்த கதை வெவ்வேறு திருப்பங்களுடன் பயணிக்கிறது.அது ஒரு மர்மமான மர்டர் மிஸ்டரி த்ரில்லர் அனுபவமாக இருக்கும்.” என்றார்.

 

The Verdict News

 

தொழில்நுட்ப ரீதியாகப் படம் ஒரு அற்புதமான குழுவைக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் ,சதீஷ் சூர்யா எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். ஐஃபா (IIFA) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய அமெரிக்கப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆதித்யா ராவ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆர். மாதவனின் இயக்கத்தில் வெளியான 'ராக்கெட்ரி :தி நம்பி எஃபெக்ட் 'படத்தின் முன்னணிப் பாடகராகவும் குரல் வடிமைப்பாளராகவும் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். இவர் தனது தனித்துவமான இசைத் திறமையை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளன.

 

இந்தக் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கிறது. முழுப் படப்பிடிப்பும் அமெரிக்காவிலேயே நடத்தப்பட்டுள்ளது. ஏதோ வெறும் பின்புலத்திற்காக அமெரிக்க நாட்டைக் காட்டாமல் அங்குள்ள வாழ்க்கை முறை, காவல்துறை, புலனாய்வு நடவடிக்கைகள், நீதிமன்றம் போன்ற அனைத்தும் நம்பகத்தன்மையுடன் படத்தில் காட்டப்பட்டுள்ளன.அந்த பரபரப்பான உலகம் பார்வையாளர்களை வசீகரித்துப் புதிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்படியாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News

10381

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery