Latest News :

யாஷின் ‘டாக்சிக்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday March-23 2025

‘கே.ஜி.எப்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷ் நடிக்கும் படத்திற்கு ‘டாக்சிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வருகிறது.

 

இந்த நிலையில், ‘டாக்சிக் -  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படம் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் விதமாக ஒரு அசத்தலான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், நெருப்பிலிருந்து எழும்பும் யாஷின் அதிரடியான தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இது சுவாரஸ்யமான கதைப் பின்னணியை விவரிக்கிறது. இந்தப் போஸ்டர், யாஷின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட டீசருக்கு பின்னர், ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

 

இந்த மாபெரும் படைப்பை இயக்கும் இயக்குநர் கீது மோகந்தாஸ், சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ஆவார். சண்டேன்ஸ் திரைப்பட விழாவில், திரைப்படங்கள் உணர்ச்சி மிகுந்த கதை மாந்தர்களைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டதற்காக, பல்வேறு விருதுகளை வென்றுள்ளன.

 

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் வெங்கட் கே.னாராயணா மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாக உருவானாலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

Related News

10383

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery