‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் படம் ‘பிளாக்மெயில்’. ஜே.டி.எஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர்கள் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டனர்.
இதில், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜொடியாக தேஜு அஸ்வினி நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், லிங்கா, ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஜே.எஸ்.ராம் கலை இயக்குநராக பணியாற்ற, ஆர்.திலகப்ப்ரியா சண்முகம் மற்றும் வினோத் சுந்தர் ஆடை வடிவமைப்பாளராகவும், ராஜ்சேகர் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள்.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...