Latest News :

மக்கள் கொண்டாடும் ‘உயிர் மூச்சு’! - திரையரங்குகள் கிடைக்காமல் படக்குழு தவிப்பு
Thursday April-03 2025

சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பழகிப்போன ஒன்று தான் என்றாலும், சமூக அக்கறையோடு, நல்ல திரைப்படமாக உருவாகி மக்களால் கொண்டாப்படும் திரைப்படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்காமல் தவிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘உயிர் மூச்சு’ மக்களால் கொண்டாப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், போதிய திரையரங்குகள் கிடைக்காமல் படக்குழு தவித்து வருகிறது.

 

முதலுதவி பற்றிய அமையக்கருத்துடன், வரதட்சணை கொடுமை, லஞ்சம் ஊழல், மதுபோதையால் ஏற்படும் சீரழிவு பற்றி கதைக்களத்துடன், சமூக அக்கறையோடு உருவாகியுள்ள ‘உயிர் மூச்சு’ திரைப்படத்தில் டெலிபோன் ராஜ் வில்லனாக அறிமுகமாகி மிரட்டியிருக்கிறார். 

 

விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பார்க்காத திருப்பங்கள் என சுவாரஸ்யமான படமாக வெளியாகியிருக்கும் இப்படத்தை பிராட்வே சுந்தர் இயக்கியிருக்கிறார். தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கிங்காங், பெஞ்சமின், விக்னேஷ்,சஹானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

தூத்துக்குடியில் மட்டும் இன்று உயிர் மூச்சு திரைப்படம் ரிலீஸ் ஆனது. முதல் காட்சி மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. படம் முழுவதும் ஆர வாரத்துடன் மக்கள் படத்தை ரசித்தனர். கிங் காங் படம் முழுவதும் காமெடியில் கலக்கி இருக்கிறார், தீபாவின் நடிப்பு வியக்க வைக்கிறது, பெஞ்சமின் இதுவரை நடித்திராத அருமையான வேடத்தில் நடித்திருக்கிறார். டெலிபோன்ராஜ் தமிழ் சினிமா துறையில் இருந்து முதன்முதலாக  வில்லனாக அறிமுகமாகி, ஒரு கிராமத்து வில்லனாக பயங்கரமாக மிரட்டி இருக்கிறார். மீசை ராஜேந்திரன் நடிப்பில் கம்பீரம் தெரிகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விக்னேஷ் மற்றும் கதாநாயகியாக சஹானா நடித்திருக்கிறார்கள். கதையை அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி எழுதி இருக்கிறார்.

 

இந்த திரைப்படத்தை இயக்கிய பிராட்வே சுந்தர் ஏற்கனவே அரசியல் சதுரங்கம், விதி எண் 3,  கருப்பு பக்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்களை இயக்குனர் பிராட்வே சுந்தர் எழுதி பாடியிருக்கிறார். உயிர் மூச்சு திரைப்படத்திற்கு அவரே இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தில் வரும் நான்கு பாடல்களும் மனதில் நீங்காத இடம்பெறுகிறது..

 

'ஆத்தா உன்ன பாத்தா' என்ற பாடல் உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ளது. படம் பார்த்த முதியவர் ஒருவர் கூறும்போது ..இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் ரிலீசாக வேண்டும் நான் 22 வருடங்களுக்கு பிறகு சினிமா தியேட்டர் வந்திருக்கிறேன், இந்த திரைப்படம் மிக அருமையாக உள்ளது நான் அடுத்த காட்சியும் பார்த்து விட்டு தான் வீட்டுக்கு செல்வேன் என்று கூறினார். நல்ல திரைப்படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து.

Related News

10407

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery