‘புஷ்பா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுனின் 22 வது படமாகவும், இயக்குநர் அட்லியின் 6 வது திரைப்படமாகவும் உருவாக உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படம் உலக படைப்பாக பான் வேர்ல்டு திரைப்படமாக உருவாக உள்ளது.
இன்று இப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள படக்குழு இப்படத்திற்கு தற்காலிகமான தலைப்பாக '#AA22xA6' என்று வைத்துள்ளது. இப்படத்தில், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளது. 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லியின் #AA22xA6 வது படமாக உருவாகும் இந்த புதிய படம் இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான திரைத்துறையில் புதிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...