அருண் விஜய் நடிப்பில், ‘மான் கராத்தே’ பட புகழ் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ரெட்ட தல’. பிடிஜி யூனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கிறார். தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்தின் தலைப்பு, முதல் பார்வை உள்ளிட்ட ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் நிலையில், தற்போது அருண் விஜய் நடிக்கும் படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பை வெளிநாட்டில் பல இடங்களில் மிகபிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனர். விரைவில் இப்பாடல் லிரிகல் வீடியோ வடிவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் எந்த வித ஈகோவும் இல்லாமல், இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...