சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற விஷாலில் ‘துப்பறிவாளன்’ மற்றும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ ஆகிய படங்கள் தற்போது டிஜிட்டலில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்றன.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பைரசியை ஒழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் டிஜிட்டல் பிளாட்பார்ம். திரையில் வெளியான புதிய படங்களை சில நாட்களிலேயே, அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடுவதன் மூலம், நல்ல தரத்துடன் உலக நாடுகள் பலவற்றில் மக்கள் கண்டுகளிப்பதுடன், தயாரிப்பாளர்களுக்கும் கனிசமான வருவாய் கிடைக்கிறது.
அமேசான் பிரைம், ஹீரோ டாக்கீஸ் போன்ற பல நிறுவனங்கள் இத்தகைய டிஜிட்டல் பிளாட்பார்மில் சேவை செய்து வரும் நிலையில், தற்போது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘மகளிர் மட்டும்’ மற்றும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்த ‘துப்பறிவாளன்’ ஆகிய இரண்டு படங்களும் ஹீரோ டாக்கீஸ் மற்றும் அமேசான் பிரைம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சப் டைடிலோடு வெளியாகியுள்ள இந்த இரண்டு படங்களையும், உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களுடம் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் கண்டுகளிக்கின்றனர். படம் சப் டைடிலோடு வெளியாகியுள்ளது.
இதுபோல பல படங்கள் டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாக உள்ளது. இது குறித்த விபரங்களை தெரிந்துக் கொள்ள விரும்பும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தை அனுகலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...