Latest News :

உலக சினிமா வரலாற்றில் சொல்லப்படாத கதை, கதாபாத்திர வடிவமைப்பில் உருவாகியுள்ள ‘கீனோ’!
Monday April-14 2025

கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிக்க, ஆர்கே திவாகர் இயக்கத்தில் மகாதாரா பகவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களான மூவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் ’கீனோ’.

 

இதுவரை நாவல்களிலோ திரைப்படங்களிலும் சொல்லப்படாத கதை கருவும் கீனோ என்ற கதாபாத்திரமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாகவும் புதுமையானதாகவும் இருக்கும். இந்தத் திரைப்படத்தை எழுதி இசையமைத்து இயக்கி இருக்கும் ஆர்.கே.திவாகர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்குதல் துறையில் பயின்று சிறந்த முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று ஏ.வி.எம் மெமோரியல் விருது மற்றும் தங்கப் பதக்கமும் பெற்றவர். இவர் இயக்குநர் கதிரிடம் ’காதல் வைரஸ்’ படத்தில் உதவி இயக்குநராகவும், இயக்குநர் மிஷ்கினின் ’சித்திரம் பேசுதடி’, ’நந்தலாலா’ திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.

 

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி கிருத்திகா காந்தி தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு துறையில் பயின்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தமிழக அரசின் திரைப்பட விருது பிரிவில் சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாணவ விருதை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் பெற்றவர். இவர் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பேத்தியாவார். இவர் தமிழ் திரை உலகின் முதல் பெண் படத்தொகுப்பாளர் என்ற சிறப்புக்குரியவர்.

 

இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகாதாரா பகவத்தும் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படப்  பதனிடுதல்  (Film Processing &DI ) பிரிவில் முதல் மாணவராக தமிழ்நாடு திரைப்பட விருது பிரிவில் சிறந்த மாணவர் விருதை டாக்டர் கலைஞர் அவர்களிடம் பெற்றவர்.

 

இத்திரைப்படத்தில் மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா ( அறிமுகம்). ரேணுகா சதீஷ் ( அறிமுகம்), கண்ணதாசன் ராஜேஷ் கோபிஷெட்டி நடிக்க, இவர்களோடு பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.

 

இத்திரைப்படத்தின் ஆலிவர் டென்னி ஒளிப்பதிவு செய்ய கிருத்திகா காந்தி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.  எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் சிவம் பணியாற்ற,  மக்கள் தொடர்பாளராக பெருதுளசி பழனிவேல் பணியாற்றுகிறார்.  இணை தயாரிப்பு பணியை மகாதரா  பகவத், ஆர்.கே திவாகர் கவனிக்க, கிருத்திகா காந்தி தயாரித்துள்ளார். எழுத்து இசை & இயக்கம் ஆர். கே. திவாகர்.

 

கீனோ  திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தயாரிப்பாளர் முரளி ராமசுவாமி, இயக்குநர் கதிர், இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிட்டார்கள்.

 

Keeno

 

இத்திரைப்படம் விரைவில் வெள்ளித்திரையில் வரவிருக்கிறது.

Related News

10421

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery