Latest News :

நடிகர் ஹரிஷ் கல்யாணின் 15 வது படம் அறிவிப்பு!
Tuesday April-15 2025

‘லப்பர் பந்து’ வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாணின் 15 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஐ.டி.ஏ.ஏ புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியான ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.

 

வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். ஐ.டி.ஏ.ஏ புரொடக்‌ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளனர். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு,  இன்னும் சில தினங்களில் முழுமையாக முடிவடையவுள்ளது. விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கவுள்ளது.  

 

இந்த நிலையில், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தற்காலிகமாக HK15 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு இரத்தம் தெறிக்க ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

 

HK15

 

கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைக்கிறார். மதன்.ஜி படத்தொகுப்பு செய்ய, பாபா பாஸ்கர் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். 

Related News

10425

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery