Latest News :

‘கரம் மசாலா’ படக்குழுவினரை நேரில் வாழ்த்திய விஜய் சேதுபதி!
Tuesday April-15 2025

நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக  உருவாகியுள்ள கரம் மசாலா  படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

 

இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. உதாராணமாக வீடு , திருமணம்,தொழில்  அனைத்தும் அவர்களின் பங்கு உள்ளது...அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, முழுக்க முழுக்க சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக  இப்படத்தை உருவாக்கியுள்ளார் தமிழன் படப்புகழ் இயக்குநர் அப்துல் மஜீத். 

 

இப்படத்தில் முன்னணி நடிகர் விமல்  நாயகனாக நடித்துள்ளார், சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா,  மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.  

 

இப்படத்தை பெரும் பொருட்செலவில்,  அப்துல் மஜீத் அவர்கள்  இயக்குகிறார். ஒளிப்பதிவு  கே. கோகுல்,  எடிட்டிங் ஏ.ஆர்.சிவராஜ், இசை பைஜூ ஜேக்கப், EJ ஜான்சன்,  நிர்வாக தயாரிப்பு மு. தென்னரசு, எம்.ரகு. கிரியேட்டிவ் ஆர்கனைஸேசன் பாஸ்கர் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள்....

 

பெரியவர்கள்  முதல் குழந்தைகள் வரை அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கொண்டாடும் வகையிலான கலக்கலான கமர்ஷியல்  காமெடிப்படமாக இப்படம் இருக்கும். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Related News

10428

45 வது படத்தில், 46 நடிகர்களுடன் நடித்திருக்கும் ஜீவா!
Monday January-12 2026

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

Recent Gallery