Latest News :

இந்திய அளவில் இதுவரை யாரும் செய்யாததை செய்யும் ஹிப் ஹாப் தமிழா ஆதி!
Wednesday April-16 2025

சுயாதீன இசைக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தற்போது இசையமைப்பாளர், பாடகர், திரைப்பட நாயகன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தோடு வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தையும், பெரும் ரசிகர் வட்டத்தையும் பெற்றிருக்கும் ஆதியின் படங்களுக்கு என்று மிகப்பெரிய வியாபாரம் இருப்பதால் அவரை வைத்து படம் தயாரிக்க மற்றும் இயக்க பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வரிசையில் நிற்கிறார்கள். 

 

நாயகனாக நடித்தாலும், தான் நடிக்காத படங்களுக்கும் இசையமைப்பது, திரைப்பட தயாரிப்பு என்று படு பிஸியாக இயங்கி வரும் ஆதி, தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை உலகளவில் எடுத்துச் செல்லும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதற்காக ‘தமிழண்டா’ என்ற அமைப்பு ஒன்றை ஒருங்கிணைத்துள்ள அவர், தனது நண்பர்களுடன் இணைந்து தமிழ் மொழி உருவாக்கத்தை ஆவணப்படமாக தயாரித்திருந்தார். இந்த ஆவணப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இலக்கியத்தில் பொருநை நதிக்கரை என்றழைக்கப்படும் தாமிரபரணி நதியோறும் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சியை ஆவணப்படமாக தயாரித்துள்ளார்.

 

’பொருநை’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம், இந்திய அளவில் அகழ்வாராய்ச்சி குறித்து உருவான முதல் ஆவணப்படமாகும். இதில், அகழ்வாராய்ச்சி மூலம் ஒரு சமூகத்தின் வரலாறு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பண்டைய பொருட்களின் காலக்கட்டத்தை அறிவியல் ரீதியாக எப்படி உறுதி செய்கிறார்கள், அகழ்வாராய்ச்சி பணிகள் எப்படி நடக்கிறது உள்ளிட்ட பல விசயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

குறிப்பாக பொருநை நதிக்கரையில் கிடைத்த இரும்பு பொருட்கள் மூலம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உருக்கு இரும்பு என்ற கார்பன் கலக்கப்பட்ட உறுதியான இரும்பை பயன்படுத்த துவங்கி விட்டனர், என்ற உண்மை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு விசயம் நடக்கும், என்று யாரும் எதிர்பார்க்காத முன்பே, ஹிப் ஹாப் ஆதி அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியை ஆவணப்படமாக்க வேண்டும் என்று முடிவு செய்து, கடந்த மூன்று வருடங்களாக தனது சொந்த செலவில், தனது குழுவினருடன் அகழ்வாராய்ச்சி பணிகளை பதிவு செய்து வந்தார். தற்போது உலகத்திலேயே மிகப்பழமையான இரும்பு நாகரீகம் தமிழகத்தில் இருந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், இதை தனது ஆவணப்படம் மூலம் உலகிற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி, ‘பொருநை’ ஆவணப்படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளவர், ஓடிடி மற்றும் திரையரங்குகளிலும் வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், தனது உலக இசைப்பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக 8 நாடுகளுக்கு பயணித்துள்ளவர், மேலும் 6 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக படங்கள் நடிப்பதை தற்போது நிறுத்தி வைத்திருப்பவர், இசைப் பயணத்தின் போதே சில படங்களுக்கு மட்டும் இசையமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இசைப்பயணம் முடியும் தருவாயில் ‘ஜோ’ பட இயக்குநர் இயக்கும் ஒரு படத்தில் நடிப்பவர், இசைப்பயணம் முழுமையாக முடிந்த பிறகு தான் நடிக்கும் படங்களின் அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

 

திரைத்துறையில் பல துறைகளில் வெற்றி வாகை சூடி பிஸியாக வலம் வந்தாலும், ஹிப் ஹாப் ஆதியின் தமிழ் பற்று மற்றும் தமிழர்களின் பெருமை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை உலக அரங்கில் கொண்டு செல்ல வேண்டும் என்ற இத்தகைய முயற்சி இதுவரை யாரும் செய்யாத ஒன்று மட்டும் அல்ல, நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரியதாகும். 

 

ஆக, ஹிப் ஹாப் ஆதியின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துவோம்!.

Related News

10433

ஜி.வி. பிரகாஷ் குரலில் திருவாசகம் முதல் பாடல் 22 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday January-20 2026

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...

’அறுவடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Tuesday January-20 2026

இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...

அமேசான் மியூசிக் குளோபல் 2026 ஆர்டிஸ்ட்ஸ் டு வாட்ச் பிரச்சாரத்தை துவங்கியது
Tuesday January-20 2026

அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த  ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக,  2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய  தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க  கலைஞர்கள்”   வருடாந்திர பட்டியலை  இன்று அறிவித்துள்ளது...

Recent Gallery