Latest News :

எம்.ஜி.ஆர் பேரன் தலைமையில் மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம்!
Saturday October-21 2017

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் எஸ்.பி.கே பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வகுமார்  இணைந்து தயாரிக்கும் படம் ‘வாட்ஸ் அப்’. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன். இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான்.

 

இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர 'அஞ்சல்' மோகன் - ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய்  - ரக்ஷிதா, காதல் சுகுமார் - லாலித்தியா  என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரஷீத் இயக்கும் இப்படத்திற்கு ஜே.வி இசையமைக்கிறார்.

 

இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், எங்கிருந்தோ வந்த ஒரு தனியார் அமைப்பு தங்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய முனைவதை கண்டு பொங்கி எழுகின்றனர்.

 

அலங்காநல்லூரில் அவர்கள் போராட்டத்தின் வீச்சு குறைவாக இருக்கவே, போராட்டக்களத்தை சென்னை மெரீனா பீச்சுக்கு மாற்றுகின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை. வரும் நவம்பர் -15-ல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. உடுமலை, பொள்ளாச்சி, மூணாறு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Related News

1044

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery