Latest News :

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Monday April-21 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தி, விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘ஏஸ்’. ( ACE) இதில் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். மேலும், யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் . இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார்.  படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்பை ஏ.கே . முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். 

 

மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்ட இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர்-  கிளிம்ப்ஸ் - பாடல்-  ஆகியவை வெளியாகி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ரசிகர்களிடத்தில் மட்டுமின்றி திரையுலக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Related News

10445

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery